Tuesday, 19 April 2016

மாயவன்...

எதார்த்த பேச்சால் என்னை பேச முடியாமல் செய்தவன்
தன் கதைகளால் என் கதையை எழுதவைக்கிறான்...
கண்கள் சந்திக்கவில்லை குரல்களால் சேர்ந்து இருக்கிறோம்...
பார்க்கும் போது  பதறாமல் இருக்க என்னை நானே பழுது பார்த்துக்கொண்டு இருக்கிறேன்....
எங்கு இருந்தோ திடீர் என வந்து எந்த தடயமும் இல்லாமல் என்னை தடம் புரட்டியவன்...
காதல் கொண்டு கரம் கோர்க்க முடியவில்லை என்றாலும் நட்பு கொண்டு மனம் சேர்ப்போம்....