Sunday, 2 June 2019

நீர்

அதிகம் நீராடுகிறேன், ஒரு நாளில் பல முறை...
மழை வந்து அதில் நனைந்து அழ காத்திருக்க முடியவில்லை
நீராடி அழுது தீர்க்கிறேன்...
நினைவுகள் காதல் ஊடல் கூடல் கனவுகள் ஏக்கம்
என ஏமாற்றத்தை நீரில் கரைத்து கொண்டு இருக்கிறேன்
நீர் பெரிதும் உதவுகிறது.. கேள்விகள் இல்லாமல் மௌனமாய்
அதன் கருத்தையும், பயத்தையும், கற்பனைகளையும்
என்மீது செலுத்தாமல் என்னை அணைத்துக்கொள்கிறது..
யாரும் என் நீராக முடியாது !!!  

கண்ணாடி

கண்ணாடி உடைந்தாலும் பிம்பம் காட்டும்
ஒரு முறை பல முறை என ஆயிரம் முறை உடைந்த பின்னும்
மறுதலிக்காமல் பிம்பம் காட்டும்
உடைந்த கண்ணாடி கூழ் கொண்டு மறுபடியும்
ஓர் புதிய கண்ணாடி உருவாக்கும் இவுலகம்.
பெண்கள் இதயமும் அவ்வளவே !!
உற்றதுணை  அவளின் உடைந்த இதயத்தை பற்றி எடுத்து
ஓர் புதிய உறவை தரும் !!!