Saturday, 11 June 2016

நீ !!!


தொலைத்துவிட்டோம் நம்மை,
தேடுகிறேன் என்னை,
கிடைப்பது  நீ !!!!
அழைப்பு மணியை அழுத்தும் ஒலியிலேயே
அறிந்துகொள்கிறேன் அன்றைய உன்னை...
தோற்பதும் சுகம் தான், அதை உன் மடியில்
தலை சாய்த்து சொல்லி மறப்பதெனின்....
இதற்கு எல்லாம் பேர் என்னவென்று அறியேன்
யாரேனும் கேட்டால் பூன்னகை  மட்டுமே பதில்..
அந்த புன்னகை உள் இருக்கும் மௌனம், நிறைவு
என அத்துணைக்கும் கரணம் நீ !!!!

No comments:

Post a Comment